விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்

விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்

விரைவில் பேஸ்புக் மூலம் பணப்பரிமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 3:41 pm

பேஸ்புக் நிறுவனம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் சேவையை பணப் பரிமாற்றத்தின் வாயிலாக வங்கித் துறைக்கும் நீடிக்கவுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் விரைவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைத்தளத்தின் பயனாளர் பெயரை (User Name) பயன்படுத்தி பணம் பரிமாற்றங்களை செய்ய முடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதனை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் ஒரு சோதனைக்கு செயல்படுத்திய பின் அனைத்து இடங்களிலும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை 20 வங்கிகளுக்கு அளிக்கப்படும். வங்கி பயனர்கள் அவர்களின் பொது இணைய சுயவிவரங்களை (Public Internet Profile) தங்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்த பின் வரிசை குறியீடு (Sort Code) மற்றும் வங்கி கணக்கு எண் (Bank Account Number) பேஸ்புக் ஐடி (Facebook ID), ட்விட்டர் ஹேன்டில்(Twitter Handle) மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து பயன்பெறலாம்.

இது மட்டுமின்றி ஒன்லைன் பரிமாற்றங்களை சிறு உருவ அச்சு கடவுச்சொற்கள் (Thumbprint Password), பயோமெட்ரிக் பாதுகாப்பு முறைகள் (Biometric Security Methods), வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கத்திற்கு பணப் பரிமாற்றத்தைப் பற்றி குறுஞ் செய்தி (Message) அனுப்புதல் போன்ற பாதுகாப்பு சேவைகளையும் அளிக்கிறது.

இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் மெஸ்ன்ஜர் மூலமாக வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது. எனவே மற்ற நாடுகளிளும் இதனை செயற்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்