யோஷித்த ராஜபக்ஸவிடம் மீண்டும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை

யோஷித்த ராஜபக்ஸவிடம் மீண்டும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை

யோஷித்த ராஜபக்ஸவிடம் மீண்டும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:35 pm

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஸ இன்று மீண்டும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்காவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று முற்பகல் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்ற யோஷித்த ராஜபக்ஸவிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டது.

சீ.எஸ். என் தொலைக்காட்சி தொடர்பில் இடம்பெறும் நிதி மோசடி விசாரணைக்காக யோஷித்த ராஜபக்ஸ இன்று 14 தடவையாக அழைக்கப்பட்டிருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்