மொஹமட் முஸம்மில் தொடர்ந்து விளக்கமறியலில்

மொஹமட் முஸம்மில் தொடர்ந்து விளக்கமறியலில்

மொஹமட் முஸம்மில் தொடர்ந்து விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:51 pm

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 62 இலட்சம் ரூபாவை முறையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவரை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர் சுகவீனமுற்றிருப்பதாகவும் அதனால் பிணை வழங்குமாறும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 07ம் திகதி எழுத்துமூலம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அது வரை சந்தேக நபரை விளக்க மறியலில் தொடர்ந்து வைத்திருக்குமாறு உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்