மாத்தறை தேசிய விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மாத்தறை தேசிய விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மாத்தறை தேசிய விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:17 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாத்தறையில் நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

மாத்தறை தேசிய விளையாட்டரங்கு இன்று முற்பகல் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்ட கலால்வரித் திணைக்கள அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
அங்குள்ள சிறைக் கூடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதேவேளை மாத்தறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று முற்பகல் வெலிகம நகர மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. மாத்தறை வைத்தியசாலையின் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்