பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:53 am

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொறியியல் பிரிவில் நேற்று இரவு 8.10 அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரசாயன பகுப்பபாய்வாளர்களை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் விஜேபால தெரிவித்துள்ளார்.

மின் ஒழுக்கினால் இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தினால் 30 இற்கும் கணினிகள் அழிவடைந்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்