பக்தாத்தில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் பலி

பக்தாத்தில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் பலி

பக்தாத்தில் இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 10:32 am

பக்தாத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மூன்று நாட்களை தேசிய துக்கதினங்களாக ஈராக் அரசு அறிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத்தில் சன நெரிசல் மிக்க வர்த்தகப் பகுதிகளில் நடத்தப்பட்ட 2 கார்குண்டுத் தாக்குதல்களில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

Karrada பகுதியில் வெடிமருந்துக்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று வெடிக்கச்செய்யப்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

ரமழான் விடுமுறையை கொண்டாடுவதற்காக நகர்புற கடைகளிற்கு சென்றிருந்த பலர் குடும்பங்களாகவே கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் உடல்கருகி அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதாகவும் மீட்புபணியாளர்கள் கூறுகின்றனர்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த தாக்குதலில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் அழிவடைந்துள்ளன.

இதேவேளை மற்றுமொரு தாக்குதல் பிரசித்தி பெற்ற சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இரு தாக்குதல்களிலும் 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கிய பிரதமர் ஹைடர் அல் அபாடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கெதிராக தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈராக் பாதுகாப்பு படையினர் பலூஜா நகரை ஐ.எஸ்ஸிடமிருந்து மீளக்கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ம் ஆண்டில் ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை ஐ.எஸ் ஆயுதக்குழு கைப்பற்றியதையடுத்து இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்