கிளிநொச்சி – பரவிபாஞ்சன் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சி – பரவிபாஞ்சன் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சி – பரவிபாஞ்சன் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:40 pm

கிளிநொச்சி – பரவிபாஞ்சன் பகுதியில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணியை மீள கையளிக்குமாறு பிரதேச மக்களினால் இராணுவத்திடம் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணியை தம்மிடம் மீள கையளிக்குமாறு கடந்த திங்கட்கிழமை மக்களினால் இராணுவத்தினருக்கு மஹஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன் போது ஒரு வாரத்திற்குள் இந்த விடயம் தொடர்பில் பதில் வழங்குமாறு பிரதேச மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று பிரதேச மக்கள் இன்று தமது காணிகளை கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யுத்தம் முடிந்து 7 வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாமல் வாடகை வீட்டில் தொடர்ந்தும் வசித்து வருவதாக இதன் போது பொது மக்கள் தெரிவித்தனர்.

காணிகள் விடுவிக்கப்படுவதாக பல முறை வாக்குறுதிகள் வழங்கக்பட்ட போதிலும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளதாக மக்கள் இதன் போது அங்கலாய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்