கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்பு

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்பு

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 7:26 am

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பொருளியல் நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று (04) காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

ஜனாபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி தீர்மானித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இந்திரஜித் குமாரசுவாமி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.

இந்திரஜித் குமாரசுவாமி, சஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

1973 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் இணைந்த குமாரசுவாமி, 1989 ஆம் ஆண்டு வரை அங்கு பொருளியல் ஆய்வுப் பிரிவிலும், வங்கிகள் கண்காணிப்புப் பிரிவிலும் பணியாற்றினார்.

அதன்பின்னர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் சேவையாற்றிய கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் உயர்மட்ட பதவிகளை வகித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்