உமா ஓயா திட்டம்; பாதிப்புற்ற மக்களுக்கு வருட இறுதிக்குள் நீரை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவு

உமா ஓயா திட்டம்; பாதிப்புற்ற மக்களுக்கு வருட இறுதிக்குள் நீரை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவு

உமா ஓயா திட்டம்; பாதிப்புற்ற மக்களுக்கு வருட இறுதிக்குள் நீரை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 5:44 pm

உமா ஓயா திட்டத்தினால் குடி நீர் வளத்தை இழந்த மக்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நீரை வழங்கும் பணிகளை நிறைவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் விவசாய நிலங்களை இழந்த விவசாயிகள் நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு மாகவலி அதிகார சபை ஊடாக விண்ணப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டாரவளை பகுதியை சேர்ந்த 4 விவசாயிகள் தாக்கல் செய்த மனு ஒன்றை பரிசீலினைக்கு எடுத்து கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

மனு மீதான மேலதிக விசாரணை செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்