அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 12:25 pm

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச ஆயுர்வேத வைத்தியர் சங்கம் ஆகியனவும் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அரச வைத்தியர் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அரச வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேசிய வைத்தியசாலையில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மேலும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியதுடன், ஏனைய சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயளர்கள் பாதிக்கப்பட்டனர்.

நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்ட அரச வைத்தியர் தொழிற்சங்க நடவடிக்கையால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

வெளிநோயளர் சிகிச்சை பிரிவு மாத்திரம் செயற்படவில்லை எனவும் மற்றைய சேவைகள் அனைத்தும் வழமைபோல் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளும் இதன் காரணமாக இயங்கவில்லை.

இதனால் பொத்துவில் மற்றும் மண்டூர் போன்ற தூர இடங்களிலிருந்து வருகை தந்த நோளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை புத்தளம் மாவட்ட வைத்தியசாலைகளில், அத்தியவசிய சேவைகள் தவிர ஏனைய சேவைகள் செயற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் டொக்டர் நலின்த ஹேரத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்