அரச வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானம்

அரச வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானம்

அரச வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 6:50 am

அரச வைத்தியர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் உள்ளி்ட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் டொக்டர் நலின்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதற்கு இடமளிக்கப்பபோவதில்லை என பைசல்காசிம் தெரிவித்தார்.

இதேவேளை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படதாவகையில் இதற்கு ஆதரவு வழங்குவதாக மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பெற்றோர் சங்க உறுப்பினர் சிறிசேன மானப்பெரும தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்