பக்தாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 79 பேர் உயிரிழப்பு

பக்தாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 79 பேர் உயிரிழப்பு

பக்தாத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 79 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2016 | 3:09 pm

பக்தாத்தில் நடந்த பயங்கர தற்கொலை குண்டுத் தாக்குதலில் 75 பேர் உயிரிழந்துள்ளனர் இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் உரிமைக் கோரியுள்ளனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சற்கைக்கட்டட பகுதியில் இந்த பயங்கர தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதலில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். 130 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமழான் கொண்டாடப்படும் நிலையில், பொருட்கள் வாங்க மக்கள் கூடிய சந்தைக் கட்டட பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்