நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2016 | 2:16 pm

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் கைது செயய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியைச் சேரந்தவர்கள் என
கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ட்ரோலர் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்