நிரந்த நியமனம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்த நியமனம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்த நியமனம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2016 | 3:45 pm

வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடபகுதிக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டன் பின்னர் தற்காலிமாக ரயில் கடவை காப்பாளார்களாக சேவையில் இணைத்து கொண்டதாகவும், இதுவரை நிரந்த நியமனம் வழங்கவில்லை எனவும்,சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 75 ரயில் கடவை காப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்