திக்வெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

திக்வெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

திக்வெல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2016 | 11:21 am

திக்வெல்ல ரதம்பொல,நாவரஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரண வீடொன்றுக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இன்று () அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

48 வயதான ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ரதம்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் அடையாளங்காணப்படவில்லை என்பதுடன் பொலிஸார் தொடரந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்