தனியார பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று

தனியார பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று

தனியார பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2016 | 9:56 am

தனியார பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெறவுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அனைத்து பிரதநிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காலக்கெடுவொன்றை விதிக்காமையினாலேயே இந்த பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டார்.

பஸ் கட்டணம் தொடர்பான தேசியக் கொள்கையில் உள்ள சரத்துக்களை ஏற்றுக் கொள்வதுடன் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தமக்கு திகதியொன்று வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என எதிர்ப்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்