வியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண்கலம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2016 | 4:23 pm

அமெரிக்காவின் நாசா அனுப்பி வைத்த ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகால பயணத்தின் பின்னர் வியாழன் (ஜூபிட்டர்)  கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்துள்ளது.

நாளை மறுநாள் அந்த கிரகத்தின் வட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன் கிரகம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ விண்கலத்தைத் தயாரித்தனர்.
இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி மையத்தில் இருந்து 2011, ஆகஸ்ட் 5 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து 290 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்த இந்த விண்கலம் அண்மையில் வியாழன் கிரகத்தை நெருங்கியது.

இந்நிலையில், அந்த கிரகத்தின் காந்தப்புலத்தினுள் ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக நுழைந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்