மத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட  நாணயமாற்று நிலையங்கள் சுற்றிவளைப்பு

மத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட நாணயமாற்று நிலையங்கள் சுற்றிவளைப்பு

மத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட நாணயமாற்று நிலையங்கள் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2016 | 8:30 am

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி காலி பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டு நாணயமாற்று நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி காலி பிரதேசத்தில் வெளிநாட்டு நாணயங்கள் கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதற்கமைய இரண்டு நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார், பல்வேறு நாடுகளின் நாணயங்களைக் கைப்பற்றியதுடன், நாணய மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்குத் துணைபுரிந்தவர்கள் என 7 பேரைக் கைது செய்தனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வெளிநாட்டு நாணய மாற்று நிலையங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்