பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2016 | 9:40 am

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான டாக்காவிலுள்ள உணவகத்தில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் இருந்த, இரண்டு இலங்கையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள உறவினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பங்களாதேஷுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் சேசத் தாம்புகல குறிப்பிட்டார்.

பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாதெனவும் பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்