பங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகளாக இலங்கையர்கள்

பங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகளாக இலங்கையர்கள்

பங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகளாக இலங்கையர்கள்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2016 | 6:57 am

பங்களாதேஷின் தலைநகர் டகாவிலுள்ள உணவகமொன்றின் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அங்கிருந்த சிலரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளனர்.

பணயக் கைதிகளில் வெளிநாட்டவர்கள் பலர் இருப்பதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, பணயக் கைதிகளில் இலங்கையர்களும் இருப்பதாக த ஹிந்து ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பணயக் கைதிகளில் இரண்டு இலங்கையர்கள் இருக்கலாம் என சந்தேகிப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேஷி கொலொன்னே தெரிவித்தார்.

இந்த தகவலை உறுதி செய்வதற்காக டாக்காவிலுள்ள பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்புகளுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 8 அல்லது 9 பேரைக் கொண்ட தீவிரவாதிகள் குழுவொன்று, டாக்காவிலுள்ள உணவகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக பீ.பீ.சீ. உலக சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

கிளர்ச்சியாளர்களுடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் பங்களாதேஷ் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளதாகவும் பீ.பீ.சீ. உலக சேவை மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்