டாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்

டாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்

டாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2016 | 6:38 pm

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள கஃபே ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பலியான 20 பேரும் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு டாக்காவில் குறித்த கஃபேயை ஆயுதம் தாங்கிய நபர்கள் முற்றுகையிட்ட 10 மணித்தியாலங்களில் பாதுகாப்புப் படையினர் நுழைந்தனர்.

இதன்போது, தாக்குதல் நடத்திய 6 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்