சைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக விக்ரம் தெரிவு

சைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக விக்ரம் தெரிவு

சைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக விக்ரம் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2016 | 4:40 pm

சைமா 2016 விருது வழங்கும் விழாவில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தமைக்காக நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது ஐ படத்திற்காக விக்ரமிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகினரை கௌரவித்து வழங்கப்படும் ‘சைமா 2016’ விருது கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தென்னிந்தியாவின் யூத் ஐ கான் விருது நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற தமிழ் திரையுலகினர் பட்டியல்:

சிறந்த படம் : தனி ஒருவன்
சிறந்த இயக்குனர் : விக்னேஷ் சிவன் (நானும் ரவுடிதான்)
சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் (நானும் ரவுடிதான்)
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (ஓ காதல் கண்மணி)
சிறந்த வில்லன் நடிகர் : அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த காமெடி நடிகர் : ஆர்.ஜே. பாலாஜி (நானும் ரவுடிதான்)
சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை : கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த துணை நடிகர் : பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் (படம்: நானும் ரவுடிதான்)
சிறந்த பின்னணி பாடகி : ஸ்வேதா மோகன் ( படம்: தங்கமகன்)
சிறந்த விமர்சக நடிகர் : ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த விமர்சக நடிகை : நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)
வாழ்நாள் சாதனையாளர் விருது : பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சு அருணாச்சலம்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்