காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு

காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு

காணாமற்போனோர் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2016 | 12:22 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய இடைக்கால அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இன்னும் பூர்த்தியடையாத போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக எதிர்காலத்தில் அலுவலகமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பி்ட்டார்.

காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 6000 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகைளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்