வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 4:02 pm

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் வாழைச்சேனை, ஜயந்தியாய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இந்த விபத்தில் ஜயந்தி யாய – ரிதீதென்ன பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 20 வயதிற்குட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த இளைஞரொருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்