ரஜினியின் படத்துடன் உலகை வலம் வரும் எயார் ஏஷியா விமானங்கள்

ரஜினியின் படத்துடன் உலகை வலம் வரும் எயார் ஏஷியா விமானங்கள்

ரஜினியின் படத்துடன் உலகை வலம் வரும் எயார் ஏஷியா விமானங்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 5:24 pm

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், பிரபல சர்வதேச விமான நிறுவனமான எயார் ஏஷியா, கபாலி படத்தின் ப்ரமோஷனில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

கபாலி படத்திற்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது.

விமானத்தின் வெளிப்பாகம் முழுக்க ரஜினியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி’ என்ற விளம்பரத்துடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குகிறது.

முகப்புப் பகுதியில் ரஜினி உச்சரிக்கும் ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து மலேசியா மற்றும் மலேசியாவிலிருந்து உலகின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் தங்கள் விமானங்களின் வெளிப்புறத்தை கபாலி ஸ்பெஷலாக மாற்றியுள்ளமை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுவரை உலகில் எந்தவொரு நடிகர் அல்லது படத்திற்காகவும் இவ்வாறு விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை.

அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்திற்கும் கிடைத்திருக்கிறது.

ரஜினி, கபாலி என்ற பெயருடன் உலகை வலம் வருகின்றன எயார் ஏஷியா விமானங்கள்.

Rajini-Kabali-Flight-Photos-HD.jpg.pagespeed.ce.tCCfqjG3Ji


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்