ரக்பி போட்டிகளின்போது அமைதியின்மையை ஏற்படுத்திய மூன்று பாடசாலை அணிகளுக்கு தடை 

ரக்பி போட்டிகளின்போது அமைதியின்மையை ஏற்படுத்திய மூன்று பாடசாலை அணிகளுக்கு தடை 

ரக்பி போட்டிகளின்போது அமைதியின்மையை ஏற்படுத்திய மூன்று பாடசாலை அணிகளுக்கு தடை 

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 4:54 pm

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகளின்போது அமைதியின்மையை ஏற்படுத்திய மூன்று பாடசாலைகளுக்கு போட்டித்தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கண்டி – தர்மராஜ கல்லூரியின் ரக்பி அணிக்கு 9 மாத போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அணியின் பிரதம பயிற்சியாளருக்கும் பாடசாலை அணிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தர்மராஜ கல்லூரி ரக்பி அணி வீரர்கள் 7 பேருக்கு ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, கொழும்பு கேரி கல்லூரி மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரிகளின் ரக்பி அணிகளுக்கும் தலா 6 மாத போட்டித் தடையை விதிப்பதற்கு கல்வியமைச்சு இன்று தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ரக்பி போட்டிகளின் போது ஏற்பட்டிருந்த அமைதியின்மை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்