முல்லைத்தீவு முறிகண்டி விபத்தில் 4 பேர் காயம்

முல்லைத்தீவு முறிகண்டி விபத்தில் 4 பேர் காயம்

முல்லைத்தீவு முறிகண்டி விபத்தில் 4 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2016 | 2:12 pm

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவரும் லொறி சாரதியும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்து இடம்பெற்ற இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்ட நபரும் மோட்டார் சைக்கிள் சாரதியும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்