மீண்டும் சிந்தியுங்கள் திட்டம் காலி, இரத்தினபுரி, அம்பாறையில் முன்னெடுப்பு

மீண்டும் சிந்தியுங்கள் திட்டம் காலி, இரத்தினபுரி, அம்பாறையில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 9:00 pm

மீண்டும் சிந்தியுங்கள் திட்டம் இன்று 14 ஆவது நாளாக காலி, இரத்தினபுரி மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் மத்திய பஸ்தரிப்பு நிலையத்திற்குச் சென்று நியூஸ்பெஸ்ட்டின் ”மீண்டும் சிந்தியுங்கள்” குழுவினர் மக்களின் தகவல்களைப் பதிவு செய்துகொண்டனர்.

அதனையடுத்து, கல்முனை பொதுச்சந்தையில் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒலுவில் கடற்பகுதிக்குச் சென்ற நியூஸ்பெஸ்ட் குழுவினருக்கு மண் அரிப்பின் அபாயத்தினை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

இதேவேளை, எமது மற்றைய குழுவினர் மாகல்ல, சமகிவத்த உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.

பத்தேகம, மீமெடுவ, ஜனஉதான, ரணவிருகம ஆகிய பகுதிகளுக்கும் எமது குழுவினர் சென்றிருந்தனர்.

பலாங்கொடை, ரஸ்ஸகல பகுதிக்குச் சென்ற எமது மற்றைய குழுவினர் மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் விளக்கமளித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்