மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2016 | 2:09 pm

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்க நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி நேற்று அறிவித்தார்.

இதனடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நேற்று மத்திய வங்கிக்கு சென்று அங்குள்ள உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

இதன் போது மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு பலருடைய பெயர்கள் பிரேரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வௌியாகின.

இதேவேளை நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிகழ்வொன்றுக்கு கலந்து கொள்ள சென்ற மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்