பிள்ளையானின் பிணைமனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பிள்ளையானின் பிணைமனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பிள்ளையானின் பிணைமனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2016 | 1:58 pm

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணைமனு மீதான விசாரணை அடுத்த மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபரான பிள்ளையான் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி வழக்கை ஒத்துவைத்து தீர்ப்பளித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை தொடரந்தும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்