நாட்டின் நான்கு பகுதிகளில் ”மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தின் பேரணிகள் ஏற்பாடு

நாட்டின் நான்கு பகுதிகளில் ”மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தின் பேரணிகள் ஏற்பாடு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 8:39 pm

பொதுமக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை அரசியல் பிரதிநிதிகள் நிறைவேற்றியுள்ளார்களா என்பதை ஆராய்வது மீண்டும் சிந்தியுங்கள் திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் விடுக்கும் பாரிய நான்கு பேரணிகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டின் நான்கு பகுதிகளில் இடம்பெறவுள்ளன.

”மீண்டும் சிந்தியுங்கள்” திட்டத்தின் இந்த நான்கு பேரணிகளும் எதிர்வரும் சனிக்கிழமை மாலை நாட்டின் நான்கு பகுதிகளில் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் மாகாண மக்கள் பேரணி பொரால வாவிக்கு அருகில் இடம்பெறவுள்ளது.

வட மத்திய மாகாணத்திற்கான மீண்டும் சிந்தியுங்கள் மக்கள் பேரணி நொச்சியாகமயில் நடைபெறவுள்ளது.

மத்திய மாகாணத்திற்கான மக்கள் பேரணி லக்கல – லக்சிறிகம வடுவாதென்ன வாவிக்கு அருகில் சனிக்கிழமை மாலை நடைறெவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் குரலை ஒலிக்கச் செய்யும் மக்கள் பேரணி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்