“சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” எனும் தொனிப்பொருளில் யாழில் பேரணி

“சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” எனும் தொனிப்பொருளில் யாழில் பேரணி

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 4:24 pm

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தால் “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” எனும் தொனிப்பொருளில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பேரணி இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் 3 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி யாழ்.பொலிஸ் நிலைய வீதி ஊடாகப் பயணித்து வைத்தியசாலை வீதியை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து யாழ். பொது நூலக முன்றலில் பேரணி நிறைவடைந்து, அங்கு “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” எனும் தொனிப்பொருளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்தப் பேரணியில் பாடசாலை மாணவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்