“சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்

“சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 7:36 pm

“சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” எனும் தொனிப்பொருளில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.

பொரளையில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

ஜனாதிபதியுடன் அமைச்சர் சாலக்க ரத்நாயக்க மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்