கிளிநொச்சியில் தொழில் திணைக்களமொன்றை அமைக்கவுள்ளதாக ரவீந்திர சமரவீர தெரிவிப்பு

கிளிநொச்சியில் தொழில் திணைக்களமொன்றை அமைக்கவுள்ளதாக ரவீந்திர சமரவீர தெரிவிப்பு

கிளிநொச்சியில் தொழில் திணைக்களமொன்றை அமைக்கவுள்ளதாக ரவீந்திர சமரவீர தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 10:05 pm

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மனிதவலு திணைக்களம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர பின்வருமாறு தெரிவித்தார்,

[quote]யாழ்ப்பாணத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்து வைத்தேன். வவுனியாவிலும் ஆடைத் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றோம். கிளிநொச்சியில் இன்று மனிதவலு திணைக்களமொன்றை ஆரம்பித்துள்ளோம். எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன். விரைவில் இங்கு தொழில் திணைக்களமொன்றை அமைப்போம். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்