காபூலில் தலிபான்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 40 பேர் கொலை

காபூலில் தலிபான்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 40 பேர் கொலை

காபூலில் தலிபான்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 40 பேர் கொலை

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 4:34 pm

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காபூலில் பொலிஸ் வாகனத் தொடரணியை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பயிற்சி இராணுவத்தினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பக்மன் நகர மேயரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கனேடியத் தூதரகத்தில் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்