உத்தரவாதம், நம்பகத்தன்மை, சுதந்திரம், நடுநிலைமைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் – செய்ட் ராட் அல் ஹுசைன்

உத்தரவாதம், நம்பகத்தன்மை, சுதந்திரம், நடுநிலைமைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் – செய்ட் ராட் அல் ஹுசைன்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2016 | 8:14 pm

உத்தரவாதம், நம்பகத்தன்மை, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை என்பவற்றிற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர், இளவரசர் செய்ட் ராட் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையில் நல்லிணக்கத்தை அடைய அரசாங்கம் ஒன்றுபட்டு உறுதியுடன் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்