மதுரங்குளியில் கடும் காற்றினால் இருபதுக்கும் அதிகமான வீடுகள் சேதம்

மதுரங்குளியில் கடும் காற்றினால் இருபதுக்கும் அதிகமான வீடுகள் சேதம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2016 | 8:44 pm

புத்தளம், மதுரங்குளி பகுதியூடாக ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 20 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

மதுரங்குளி – கந்தத்தொடுவாய் பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்று மற்றும் மழையின் காரணமாக தென்னை மரங்கள் வீடுகளின் மீது முறிந்து வீழ்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் கடும் காற்றினால் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகுகள் பலவும் தூக்கியெறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இடர் முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது, பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்று காரணமாக 20 க்கும் அதிகமான வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சேதவிபரங்களை முந்தல் பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு, பொலிஸார் இணைந்து திரட்டி வருவதாகவும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

இது தவிர இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்