மட்டக்களப்பு, ஹட்டன், களுத்துறையில் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு 

மட்டக்களப்பு, ஹட்டன், களுத்துறையில் ”மீண்டும் சிந்தியுங்கள்” வேலைத்திட்டம் முன்னெடுப்பு 

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2016 | 9:58 pm

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ”மீண்டும் சிந்தியுங்கள்” திட்டக் குழுவினர் இன்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மக்களை சந்திப்பதற்கு சென்றிருந்தனர்.

இதன்போது போரத்தீவுபற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுமுன்மாரி கிராம மக்கள் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நாற்பதாம் கொலனி, 37 ஆம் கொலனி, காக்காச்சிவட்டை, பலாச்சோலை, விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கும் எமது குழுவினர் சென்றனர்.

தம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என மக்கள் கூறினர்.

நெல்லிக்காடு பகுதியில் சமுர்த்தி பயனாளிகள் சிலரை மீண்டும் சிந்தியுங்கள் குழுவினர் இன்று சந்தித்தனர்.

இதேவேளை, வடமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அறிந்த எமது குழுவினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்கள் அதிகளவில் கல்வி பயிலும் இந்த பாடசாலைக்கு நீர் மற்றும் மலசலக்கூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்றுள்ள எமது மற்றைய குழுவினர் தாந்தாமலை கிராமத்தில் மக்களின் கருததுக்களை பதிவு செய்தனர்.

மீண்டும் சிந்தியுங்கள் திட்டத்தின் 13 ஆவது நாளான இன்று களுத்துறை மாவட்டத்திலுள்ள எமது குழுவினர், மத்துகம, மடவல ஶ்ரீ சுதர்ஷனாராமயில் இருந்து பயணத்தை ஆரம்பித்தனர்.

பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அகலவத்த, ஹெடில்ல, பெல்லன, ஆடியாவல, மடவல, தெல்கஸ் சந்தி, ஹம்புரேகொட, பெல்லமஹல, பொல்கம்பல, லத்பதுர உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றனர்.

இதேவேளை, மற்றுமொரு குழுவினர் ஹட்டனிலுள்ள பல பகுதிகளுக்குச் சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்