பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் விசாரணை

பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் விசாரணை

பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2016 | 10:40 am

பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபரிடம் பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

முன்னார் பிரதி பொலிஸ் மாஅதிபர், பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் தங்க நகைகள் உள்ளிட்ட வேறு சில பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்திரா வாகிஸ்த பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட போது பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட படகொன்றை சந்தேகநபர்களிடம் மீள கையளித்தமை தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்