ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2016 | 4:21 pm

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும் என்றும் ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக, அண்மையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் தீர்மானித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு ஒன்று விலகுவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில், இதுகுறித்து பிரிட்டன் பாராளுமன்றம் நேற்று கூடி ஆலோசித்தது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக பிரிட்டன் விலகவேண்டும் என சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் சர்வதேச நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் ஒக்டோபர் மாதம் வரை பதவி வகிக்கின்றார். அவர் பதவி விலகிய பின்புதான் பிரிட்டன் விலகல் நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால், ஆங்கில மொழிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருந்தது. இதுதான் தொடர்பு மொழியாக, இந்த ஒன்றியத்திலுள்ள நாடுகளிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பிரிட்டன் விலகியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி வழக்கத்தில் உள்ளது. அவற்றையே பயன்படுத்த அந்நாடுகள் முடிவு செய்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்