வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு கோரி பேரணி

வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு கோரி பேரணி

வட மாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு கோரி பேரணி

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2016 | 12:48 pm

வவுனியா, தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவுள்ள வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா காமினி வித்தியாலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி மாவட்ட செயலகத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதா மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் பட்சத்தில் அனைத்து பிரதேச மக்களுக்கும் நன்மை ஏற்படக்கூடும் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி தொடர்பான மகஜரும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்