மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு கெஃபே வேண்டுகோள்

மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு கெஃபே வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 9:58 pm

சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கெஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கெஃபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆ​ணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை மேற்கொண்ட போதிலும் இதுவரையில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்பான தகவல்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முன்வைத்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலத்தை நிறைவு செய்யுமாறு கெஃபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய நியமனத்திற்கு இந்த அறிக்கை பயனுள்ளதாக அமையும் எனவும் கெஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்