புலத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு

புலத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு

புலத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2016 | 7:38 am

புலத்சிங்கள பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றில் கல்வி கற்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மர்மமாக உயிரிழந்துள்ளான்.

நேற்று மாலை 3 மணியளவில் குறித்த மாணவன் தனியார் வகுப்பில் கல்வி கற்று கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனுக்கு எவ்வித நோயும் இருக்கவில்லை என உரவினர்கள் தெரிவித்தனர்.

மாணவனின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனின் சடலம் தற்போது நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது 14 வயதுடைய புலத்சிங்கள , யடகம்பிட்டிய பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்