சவாலை சந்திக்கும் பிரிட்டன் பொருளாதாரம்

சவாலை சந்திக்கும் பிரிட்டன் பொருளாதாரம்

சவாலை சந்திக்கும் பிரிட்டன் பொருளாதாரம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2016 | 11:53 am

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் எடுத்த முடிவினை தொடர்ந்து, பிரிட்டனின் பொருளாதார நிலைப்பாட்டுக்கு ஒரு புதிய சவாலாக, பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்களை, மேலும் இரண்டு கடன் மதிப்பீட்டு முகமைகள் குறைத்து மதிப்பீடு செய்துள்ளன.

கருத்தறியும் வாக்கெடுப்பின் பாதிப்பினால், பிரிட்டனின் பொது நிதி ஆதாரங்கள் மீது ஏற்பட்டுள்ள அச்சங்கள், தங்களின் மதிப்பீட்டை குறைக்க நேர்ந்ததாக ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பிரிட்டனின் பொருளாதார நிலை மேலும் குறையக்கூடிய சாத்தியம் குறித்து ஸ்டாண்டர்ட் ஆண்ட் பூவர்ஸ் கடன் மதிப்பீடு முகமை நிறுவனம் எச்சரித்துள்ளது.

திங்கட் கிழமையன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து, ஆசிய பங்குச்சந்தை மீண்டும் சரிவில் தொடங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்