சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு; சேத விபரங்கள் தொடர்பான ஆய்வு நிறைவு

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு; சேத விபரங்கள் தொடர்பான ஆய்வு நிறைவு

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு; சேத விபரங்கள் தொடர்பான ஆய்வு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2016 | 1:23 pm

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சேதமடைந்த வீடுகளின் சேத விபரங்களை ஆராயும் நடவடிக்​கைகள் நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த வீடுகளை மீள் நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் முழுமையாக சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வேறு சேதங்கள் ஏற்பட்ட வீடுகள் என பிரித்து அவற்றுக்கான மீள் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு அனேகமான மீள் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் பல வீடுகளுக்கான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்மை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்