கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 17 வீரர்கள் பலி

கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 17 வீரர்கள் பலி

கொலம்பியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 17 வீரர்கள் பலி

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 4:10 pm

கொலம்பியாவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்திற்குள்ளானதில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யத் தயாரிப்பான மிக் ரக விமானம் கால்டஸ் மாகாணத்திலுள்ள வனப் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய 17 பேருமே உயிரிழந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்ததையடுத்து, கொலம்பிய இராணுவம் அத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு கொலம்பிய அதிபர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்