கருணாநிதியின் கொள்ளுப் பேரனுக்கும் விக்ரமின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம்

கருணாநிதியின் கொள்ளுப் பேரனுக்கும் விக்ரமின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம்

கருணாநிதியின் கொள்ளுப் பேரனுக்கும் விக்ரமின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2016 | 4:39 pm

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும் திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்திற்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

மனு ரஞ்சித் கருணாநிதியின் கொள்ளுப் பேரனும், மு.க.முத்து -​ சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கெயார் நிறுவனத்தைச் சேர்ந்த சி.கே. ரங்கநாதன்-​ தேன்மொழி ஆகியோரின் மகனுமாவார்.

நடிகர் விக்ரம் – சைலஜா தம்பதியருக்கு அக்‌ஷிதா தவிர துருவ் எனும் மகன் உள்ளார்.

மனு – அக்‌ஷிதா ஆகிய இருவருக்கும் ஜூலை 10 ஆம் திகதி சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளார்கள்.

 

manu ranjit_vikram vikram6


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்