கன்னியாகுமரி கடற்பகுதியில் கைதான இலங்கையர்கள் நியூசிலாந்துக்கு பயணிக்க முற்பட்டதாக தகவல்

கன்னியாகுமரி கடற்பகுதியில் கைதான இலங்கையர்கள் நியூசிலாந்துக்கு பயணிக்க முற்பட்டதாக தகவல்

கன்னியாகுமரி கடற்பகுதியில் கைதான இலங்கையர்கள் நியூசிலாந்துக்கு பயணிக்க முற்பட்டதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2016 | 1:36 pm

தமிழகத்தின் கன்னியாகுமரி கடற்பகுதியில் கைதான இலங்கையர்கள் நியூசிலாந்து நோக்கி பயணிக்க முற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று கன்னியாகுமரி  கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் இலங்கையிலிருந்து சுற்றுலா வீசாவில் 14 பேர் தமிழகம் வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்கள் சென்னை, மதுரை, ராமேஸ்வரம், பழனி மற்றும் வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்ததாகவும் தமிழக கியூ பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் இறுதியாக இவர்களுள் 5 பேர் கன்னியாகுமரியிலும் 9 பேர் திருச்செந்தூரிலும் தங்கியிருந்துள்ளதுடன் நியூசிலாந்து செல்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்காக இடைத்தரகர்களுக்கு 90,000 ரூபாவை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் இலங்கையர்கள் பயணித்த 75 அடி நீளமான படகு கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், கடத்தல்காரர்கள் படகு பதிவு செய்யப்பட்டமைக்கான இலக்கத்தையும் பொறித்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 இலங்கையர்களிடமும் தமிழக கியூ பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்