விடைபெற்றார் ஆர்ஜென்டினா நட்சத்திர வீரர்  மெஸ்ஸி

விடைபெற்றார் ஆர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி

விடைபெற்றார் ஆர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 2:28 pm

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆர்ஜென்டினா நட்சத்திர வீரர் கால்பந்து சூறாவளி லியோனல் ஆன்ட்ரே மெஸ்ஸி அறிவித்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

13 வயதிலிருந்தே அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் விளையாடி வருகிறார். மெஸ்ஸி இதுவரை 6 லா லிகா பட்டங்கள், 3 சம்பியன் லீக் பட்டங்கள், 2 உலகக்கிண்ண கிளப் ஆட்டங்களில் அணியுடன் வெற்றி என பல பெருமைகளை சேர்த்தவர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அர்ஜென்டினா அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார் மெஸ்ஸி. அதில் பராகுவேவுக்கு எதிராக 20 வயதுக்குட்பட்டோர் நட்பு ரீதியான போட்டியில் விளையாடினார்.

தொடர்ந்து, பல்வேறு விருதுகள், சாதனைகள் என கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கால்பந்து உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

கடந்த 2014 – 2015 ஆம் ஆண்டு பார்சிலோனா அணி ஸ்பானீஷ் லீக், சாம்பியன்ஸ் லீக், கோபா டெல் ரே, ஐரோப்பியன் சூப்பர் கோப்பை, ஸ்பானீஷ் சூப்பர் கோப்பை, பிபா கிளப் உலகக் கோப்பை என 6 முக்கியத் தொடர்களில் 5 போட்டிகளில் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்த 6 தொடர்களிலும் மெஸ்சி கோல் அடித்து அசத்தியுள்ளார். இது கால்பந்து உலகில் எந்த வீரரும் நிகழ்த்தியிராத சாதனை இது.

அத்துடன் கடந்த 2009 முதல் 2012 வரை 28 வயது மெஸ்சி தொடர்ச்சியாக 4 முறை பல்லான் டி ஆர் விருதை வென்றுள்ளார். கடந்த 2013, 2014ஆம் ஆண்டுகளில் ரொனால்டோ இந்த விருதை பெற்றார்.

கடைசியாக அவர் விளையாடிய கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினாவை இறுதி ஆட்டம் வரை அழைத்துச் சென்றார். இறுதி போட்டியில், சிலி அணியிடம் அர்ஜென்டினா அணி பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மெஸ்ஸி தனக்கு அளிக்கப்பட பெனாலிட்டி ஷூட் அவுட்டை அதில் தவற விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கோபா அமெரிக்கா போட்டியின் தோல்வி எதிரொலியாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு 101 நிமிடங்களுக்கும் ஒரு முறை மெஸ்சி கோல் அடித்துள்ளார். ஒவ்வொரு 202 நிமிடங்களுக்கு ஒரு முறை கோல் அடிக்க உதவிகரமாக இருந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்