வடமாகாணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில்

வடமாகாணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில்

வடமாகாணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2016 | 9:05 am

வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று  மாகாணம் தழுவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பொன்றை முன்னெடுத்துள்ளது.

இதனை அடுத்து வட மாகாண பஸ் உரிமையாளர்கள் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் குடா நாட்டு மக்கள் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தனர்.
மேலும் கிளிநொச்சியில் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலும் தூர இடங்களை நோக்கி செல்வதற்காக மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் சகல தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்ட போதிலும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது வடமாகாண ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்று தருவதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்